Breaking News

மத்திய அரசின் PM-YASAVI கல்வி உதவித் தொகை திட்டம் ஆண்டு தோறும், 1,25,000 உதவிதொகை...9,10,11,12 ம் வகுப்பு மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்...முழு விவரம்

அட்மின் மீடியா
0
மத்திய அரசின் PM-YASAVI கல்வி உதவித் தொகை திட்டம்



பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இனங்களை சேர்ந்த மாணவ/மாணவியர்களுக்கு மத்திய அரசின் PM-YASAVI(Prime Minister-Young Achievers Scholarship Award Scheme Vibrant India) திட்டத்தின் கீழ் 2022-2023 ஆம் கல்வி ஆண்டிற்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.75,000/- வீதமும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ/மாணவியர்களுக்கு ஆண்டொன்றுக்கு தலா ரூ.1,25,000/ வழங்கப்படும்.

தகுதிகள்:-

பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் இனங்களை சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்,

பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-க்குள் இருத்தல்வேண்டும்


விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:-

அலைபேசி எண், 

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு, 

வருமான சான்று, 

சாதிச்சான்று, 

ஆதார் அட்டை

விண்ணப்பிக்க:-





இந்த திட்டத்தில் உங்கள் பள்ளி இருக்கா பட்டியல் பார்க்க:-


தேர்வு முறை:-

தேசிய தேர்வு அமைப்பால் NATIONAL TESTING AGENCY கணினி வழியாக  11.09.2022 அன்று நடத்தப்பட்டு தேர்வில் வெற்றி பெறும் மாணவ/மாணவியர்கள் Merit அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.


விண்ணப்பிக்க கடைசி நாள்:-

26.08.2022 

விண்ணப்பங்களில் குறைகள் ஏதும் இருப்பின் 27.08.2022 முதல் 31.08.2022 வரை திருத்தம் செய்து கொள்ளலாம். 

தேர்வர்களின் அனுமதிச்சீட்டு விவரங்களை 05.09.2022 அன்று முதல் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு:-


Tags: கல்வி செய்திகள்

Give Us Your Feedback